• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா, சந்திமால் காயம் காரணமாக ஓய்வு !

Byadmin

Aug 19, 2026


போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.

அசித்த பெர்னாண்டோ மிகச் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களைக் கைப்பற்றி இந்தியாவுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தார்.

இன்று காலை களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது காயத்திற்குள்ளான தினேஷ் சந்திமால் தொடர்ந்து விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அவர் உட்காய அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என வைத்தியர் அறிக்கை சமர்ப்பித்ததாலேயே அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்காய அதிர்ச்சிக்குள்ளான சந்திமாலுக்கு பதிலாக பசிந்து சூரியபண்டார மாற்று வீரராக விளையாடவுள்ளார். அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது காலியில் மழை பெய்துவருவதால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது. மழை விட்ட பின்னர் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும்.

இலங்கை பொருளாதாரம்

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 462 (தேவ்டத் படிக்கல் 167, கே.எல். ராகுல் 82, த்ருவ் ஜுரெல் 51, ரிஷாப் பான்ட் 39, யஷஸ்வி ஜய்ஸ்வால் 31, ப்ரபாத் ஜயசூரிய 109 – 4 விக்., கேஷர நுவன்த 175 – 3 விக்., அசித்த பெர்னாண்டோ 63 – 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 284 (சொனல் தினூஷ 100, நிரோஷன் திக்வெல்ல 80, லஹிரு உதார 27, தனஞ்சய டி சில்வா 21, மானவ் சுதார் 76 – 4 விக்., ரவிந்த்ர ஜடேஜா 57 – 3 விக்.)

இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 193 (ரிஷாப் பான்ட் 66, தேவ்டத் படிக்கல் 44, கே.எல். ராகுல் 35, அசித்த பெர்னாண்டோ 31 – 4 விக்., ப்ரபாத் ஜயசூரிய 43 – 3 விக்., லஹிரு குமார 28 – 2 விக்.)

By admin