• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

‘562 எலும்புக்கூடுகள்’: செம்மணி மனித புதைகுழி குறித்து மீண்டும் எழுந்த மக்கள் குரல் – பின்னணி என்ன?

Byadmin

Aug 19, 2026


யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி

    • எழுதியவர், ஜெ.பரணீதரன்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

”22 வயதில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அமலன் என்ற எனது மகனுக்காக மட்டுமல்லாது யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட அனைவருக்காகவும் போராடுவதற்காக கிளிநொச்சியில் இருந்து இங்கு வந்துள்ளேன். நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன்”

போராட்டக்களத்தில் நின்றுகொண்டிருந்த யோகராசா கனகரஞ்சனி என்ற மகனைப் பறிகொடுத்த தாய் பிபிசி தமிழிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மிகவும் பாரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை 562 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி உட்பட ஏனைய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்குமாகச் சேர்த்து நீதிகோரி, ஆகஸ்ட் 14-ஆம் திகதி மாலை ‘நீதியின் ஓலம் 2’ என்ற மக்கள் போராட்டமொன்று ஆரம்பித்தது. 17-ஆம் திகதி யாழி நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்தில் நீதிகோரும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டு போராட்டம் நிறைவுபெற்றது.

போராட்டத்தின் பின்புலம் என்ன?

யோகராசா கனகரஞ்சனி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, யோகராசா கனகரஞ்சனி

1995-ஆம் ஆண்டு யுத்தகாலத்தின்போது, யாழ்ப்பாணம் முழுவதும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபின்னர், ஏராளமான பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்

By admin