• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ பட அப்டேட்

Byadmin

Aug 19, 2026


தமிழ் – தெலுங்கு என இரு மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிக்மா’ படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத் ராஜ்,  ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி , மகாலட்சுமி, ஷீலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

இத்திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம்-  ஜூலை 23ஆம் திகதியன்று வெளியானதால்…. இத்திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பபம் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருந்தபோது…. படக்குழு ‘சிக்மா’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் விஜயின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

By admin