0
மொனராகலை – சியம்பலான்டுவ 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவர் சியம்பலான்டுவ பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை (08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான இளைஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரின் சகோதரன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சியம்பலான்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 07 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 12 வயதுடைய சிறுமியே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் தனது பாடசாலை ஆசிரியரிடம் கூறியுள்ள நிலையில் அந்த ஆசிரியர் இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாடசாலை அதிபர் இது தொடர்பில் சியம்பலான்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சியம்பலான்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலான்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.