• Wed. May 27th, 2026

24×7 Live News

Apdin News

’17-ஆம் நூற்றாண்டிலே ரூ.8,000 செலவில் கட்டுமானம்’ – முதல்வர் விஜய் சென்ற புனித மேரி தேவாலயத்தின் வரலாறு

Byadmin

May 27, 2026


புனித ஜார்ஜ் கோட்டை, புனித மேரி தேவாலயம்

பட மூலாதாரம், TVK

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சமீபத்தில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் இருக்கும் புராதன மற்றும் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டார். அதன் ஒரு பகுதியாக அங்கு அமைந்துள்ள புனித மேரி தேவாலயத்திற்கும் சென்றார். இந்திய வரலாற்றில் இந்த தேவாலயத்திற்கு முக்கியமான இடம் இருக்கிறது.

இந்திய துணைக் கண்டத்தின் காலனிய வரலாற்றில் மதராசிற்கு (தற்போது சென்னை) முக்கியமான இடம் உண்டு. காலனிய மரபுகளை தாங்கி நிற்கும் சின்னங்கள் தற்போதும் இங்கு உயிர்ப்புடன் உள்ளன. அதன் ஒரு அங்கம் தான் கிட்டத்தட்ட 345 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த புனித மேரி தேவாலயமும்.

புனித ஜார்ஜ் கோட்டை, புனித மேரி தேவாலயம்

பட மூலாதாரம், ASI

படக்குறிப்பு, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் இருக்கும் புராதன மற்றும் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டார் முதலமைச்சர் விஜய்.

இந்தியாவில் கட்டப்பட்ட மிகவும் பழமையான ஆங்கிலிக்கன் (Anglican) தேவாலயம் இதுவாகும். பல கட்ட பிரெஞ்சு படையெடுப்பு, ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் படையெடுப்புகளைக் கடந்தும் இந்த தேவாலயம் தற்போதும் நிலைத்து நிற்கிறது. அதன் வரலாறு என்ன?

புனித ஜார்ஜ் கோட்டை, புனித மேரி தேவாலயம்
படக்குறிப்பு, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள புனித மேரி தேவாலயம்.

இந்த தேவாலயத்தை கிழக்கின் வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே (லண்டனில் உள்ள பழமையான தேவாலயம்) என்று அழைப்பதாக ‘புனித மேரி தேவாலயத்திற்கான ஒரு கையேடு’ என்ற புத்தகத்தில் சார்லஸ் ஹெர்பர்ட் மால்டென் குறிப்பிடுகிறார்.

“ஆசியாவின் முதல் ஆங்லிக்கன் தேவாலயம்”

புனித ஜார்ஜ் கோட்டை, புனித மேரி தேவாலயம்

பட மூலாதாரம், A Handbook to St.Mary’s Church/Charles Herbert Malden

“இது ஆங்கிலேய குடியேறிகளால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவில் கட்டப்பட்ட பழமையான பிரிட்டிஷ் கட்டடம்,” என்று தனது புத்தகத்தில் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

By admin