• Wed. May 27th, 2026

24×7 Live News

Apdin News

நீலகிரி சாலையோரம் கிடந்த ஒட்டுண்ணி ‘ஈ’ இந்திய இயற்கை வரலாற்றில் இடம்பிடித்தது எப்படி?

Byadmin

May 27, 2026


நீலகிரி சாலையோரம் கிடந்த ஒட்டுண்ணி ஈ இந்திய இயற்கை வரலாற்றில் இடம்பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், N.Moinudheen

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் பனிமூட்டம் சூழ்ந்த நீலகிரி மலைப் பகுதியில் உயிரியலாளர் நிஜாமுதீன் மொய்னுதீன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஒரு வழக்கமான களப் பயணம், ஓர் எதிர்பாராத அறிவியல் கண்டுபிடிப்புக்கு வித்திட்டது.

அவர்கள் அப்பகுதியில் உள்ள காட்டுயிர்களை ஆவணப்படுத்திக் கொண்டிருந்தபோது, ஊட்டிக்கு அருகில் சாலையோரத்தில் புதிதாக இறந்து கிடந்த ஒரு பறவையைக் கண்டனர். அவர்கள் அதைக் கவனித்தபோது, அதன் பிடரிப் பகுதியில் இருந்து ஒரு சிறிய ஒட்டுண்ணி ஈ ஊர்ந்து வந்து தரையில் விழுந்தது.

அது, இதுவரை இலங்கையில் மட்டுமே இருப்பதாக நம்பப்பட்ட, ஓரிடவாழ்வியாகக் கருதப்பட்ட ‘மயோப்தீரியா ஸெய்லானிகா’ என்ற அரிய வகை ஒட்டுண்ணி ஈ. அது “இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை” என்கிறார் அதைக் கண்டறிந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயிரியலாளரான மொய்னுதீன்.

‘ஹிஸ்டோரியா நேச்சுரலிஸ் பல்காரிகா’ என்ற சர்வதேச ஆய்விதழில் சமீபத்தில் இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை வெளியானது. இந்தக் கண்டுபிடிப்பு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான சூழலியல் தொடர்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

இந்த ஆய்வை, ஜோசஃப் ஒபோனா, ஆரோக்கியநாதன் சாம்சன், கேசவன் ரிஷி, அன்பழகன் அபினேஷ், இளங்கோவன் விக்னேஷ், மூர்த்தி சரண், முகமது ஷாஹிர், ஆசாத் காமில் ஆகிய ஆய்வாளர்கள் அடங்கிய குழு மேற்கொண்டது.

By admin