• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

3-ஆவது டி20: 125 ரன்களில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

Byadmin

Jul 8, 2026


இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடந்த முதல் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.

இங்கிலாந்து பேட்டிங்:

டாஸ் தோற்று பேட்டிங் ஆட வந்து இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் நல்ல துவக்கம் கொடுத்தனர். பில் சால்ட் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 70 ரன்களை விளாச ஜாஸ் பட்லர் 21 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கியவர்களில் சாம் கர்ரன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் ஹர்ஷித் ராணா, ப்ரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்தியா சொதப்பல்:

202 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி முறையே 10 மற்றும் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 13 ரன்களுக்கும், கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 5 ரன்னுக்கும், அக்சர் படேல் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கியவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 11.4 ஓவர்களில் வெறும் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளையும், வில் ஜாக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

By admin