• Mon. Aug 17th, 2026

24×7 Live News

Apdin News

’40 ஆண்டுக்கு முன் கூறியிருந்தால், நான் வெளியேறியிருப்பேன்’: மகாராஷ்டிர அரசின் புதிய உத்தரவு பற்றி இவர்கள் கூறுவது என்ன?

Byadmin

Aug 17, 2026


தானேவில் வசிக்கும் ரிக்ஷா ஓட்டுநரான கன்ஹையாலால் சுக்லா, மராத்தி மொழியில் செயல்முறை அறிவு கட்டாயம் என்ற முடிவின் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்

பட மூலாதாரம், Shardul Kadam

படக்குறிப்பு, தானேவில் வசிக்கும் ரிக்ஷா ஓட்டுநரான கன்ஹையாலால் சுக்லா, மராத்தி மொழி அறிந்திருப்பது கட்டாயம் என்ற முடிவின் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்

“நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிலைமை இப்படி இருக்கவில்லை. அப்போது யாராவது எங்களிடம், ‘நீங்கள் மராத்தி மொழியைக் கற்காவிட்டால், இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்’ என்று சொல்லியிருந்தால், நாங்கள் இங்கு தங்கியிருக்கவே மாட்டோம். இப்போது ஆட்சியாளர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள், அந்த முடிவைச் செயல்படுத்தி உரிமங்களை ரத்து செய்யுங்கள்.”

தானே நகரில் வசிக்கும் ரிக்ஷா ஓட்டுநரான கன்ஹையாலால் சுக்லா, ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி அறிவு கட்டாயம் என்ற மகாராஷ்டிர அரசின் முடிவு பற்றி பேசும் போது இவ்வாறு கூறினார்.

மகாராஷ்டிராவில் உள்ள ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் மராத்தி மொழியைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் கூடியவர்களாக இருக்க வேண்டுமென மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு பிறகு மராத்தி தெரியாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஓட்டுநர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில், மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரை ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான மராத்தி வகுப்புகளை அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதுவரை சுமார் 1.65 லட்சம் ஓட்டுநர்கள் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு மராத்தியை கற்றுக்கொண்டுள்ளனர்.

By admin