• Tue. Sep 24th, 2024

24×7 Live News

Apdin News

45-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகள் சாதனை படைத்தது எப்படி?

Byadmin

Sep 24, 2024


தங்கம் வென்ற இந்திய சதுரங்க அணி, செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம், FIDE

படக்குறிப்பு, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது.

ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை பெற்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு அதைத் தக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, குகேஷ் டி, திவ்யா தேஷ்முக், வந்திகா அக்ராவால் ஆகியோர் வெவ்வேறு நிலைகளில் தனி நபர் ஆட்டத்துக்கு தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

2022-ஆம் ஆண்டு சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற போது, இந்திய அணிகள் வெண்கலப் பதக்கம் வென்றன. இம்முறை இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்புகின்றன இந்திய அணிகள். இந்திய ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், பெண்கள் அணியில் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச செஸ் பெடரேஷனால் (FIDE) நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பொது பிரிவில் 193 அணிகளும் பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றன.

By admin