4
ரஷ்யாவின் கிழக்கே வெகு தூரத்தில் சீன எல்லையில் உள்ள பிராந்தியம் அமுர். இந்த பிராந்தியத்தில் டின்டா என்ற நகர் உள்ளது.
இந்த நகருக்கு இன்று வியாழக்கிழமை (24) சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான AN-24 பயணிகள் விமானம் பயணித்தது.
அதில் ஐந்து குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என 49 பேர் பயணித்தனர்.
குறித்த விமானம், டிண்டா அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையின் ரேடாரில் இருந்து திடீரென விலகியது. அத்துடன், தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது.
இதனையத்து விமானத்தைக் கண்டுபிடிக்க மீட்பு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.
பிறகு டின்டாவிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைச்சரிவில் விமானம் எரிந்துகொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் காட்டுப்பகுதியிலிருந்து புகை வெளியேறும் காணொளிகளை ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டனர்.
சம்பவ இடத்துக்கு மீட்புப்படை அனுப்பப்பட்டிருப்பதாக அமுர் வட்டாரக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.
தற்போதைக்கு 25 மீட்புப் பணியாளர்களும் 5 உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன. 4 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என அதிகாரி தெரிவித்தார்.
அன்காரா ஏர்லைன்ஸுக்குச் (Angara Airlines) சொந்தமான விமானமே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. எனினும், அந்நிறுவனம் விபத்தைப் பற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை.
தற்போது இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.