0
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி நாளைமறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் எனத் தெரியவில்லை. வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சுழற்பந்து வீச்சாளராக உள்ளனர். இதனால் குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது. பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீருக்கு கங்கலி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-
5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் இணைத்து, சரியான அட்டாக் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும் என கம்பீரை அறிவுறுத்துகிறேன். இது போன்று பேட்டிங் (4ஆவது போட்டி) செய்தால் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற முடியும்.
இது இளம் வீரர்களை கொண்ட அணி. அணி கட்டமைப்புக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். மான்செஸ்டர் 4ஆவது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்ததை பார்க்கும்போது, லார்ட்ஸ் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கவலைப்படும்.
மான்செஸ்டர் டெஸ்டிடில் 5ஆவது நாள் உண்மையிலேயே சிறப்பாக பேட்டிங் செய்தது, லார்ட்ஸ் மைதானத்தில் 190 இலக்கை எட்டியிருக்க வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்கள் பல டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்கு நல்லது.
இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.