50,000கி.மீ பயணித்து 28 ஆண்டுகள் கழித்து தாயுடன் இணைந்த மகன்
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் பாராசூட் படை வீரரான கார்ல் புஷ்பி, பயணத்தை முன்னெடுக்கப் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தாமல் உலகைச் சுற்றிவர வேண்டும் என்ற இலக்குடன், 1998ஆம் ஆண்டு தனது 29 வயதில் சிலியிலிருந்து நடந்தே பயணத்தைத் தொடங்கினார்.
இந்தப் பயணத்தில் பனிக்கரடிகள், ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டது, ஆயுதம் ஏந்திய குழுக்கள் எனப் பல ஆபத்துகளை அவர் சந்தித்தார்.
மத்திய அமெரிக்கக் காடுகளையும் உறைந்த பெரிங் நீரிணையையும் அவர் கடந்து சென்றார்.
கஜகஸ்தானில் இருந்து அசர்பைஜான் வரை காஸ்பியன் கடலை அவர் நீந்திக் கடந்தார்.
இந்தப் பயணத்தை 12 ஆண்டுகளில் முடிக்கலாம் என நினைத்ததற்கு மாறாக, பல ஆண்டுகள் கழித்தே அவரால் வடக்கு இங்கிலாந்தின் ஹல் நகருக்குத் திரும்ப முடிந்துள்ளது. அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு