• Tue. Sep 29th, 2026

24×7 Live News

Apdin News

650 ஆண்டு பழமையான ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்க நீதிமன்றம் அனுமதி – என்ன நடந்தது?

Byadmin

Sep 29, 2026


உஜ்ஜைன், ஷாஹி மசூதி, மத்திய பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அம்மாநில உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

இதன் மூலம், உஜ்ஜைனில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சிம்ஹஸ்த கும்ப மேளாவுக்கான முன்னேற்பாடாக நகரில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள சுமார் 650 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் உஜ்ஜைனின் ஷாஹி மசூதி விவகாரத்தில் திங்கள்கிழமை காலை சர்ச்சை வெடித்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே சத்ரி சௌக் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடினர். திங்கள்கிழமை காலை அங்கிருந்த மக்கள் திரளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியது.

இந்தச் சர்ச்சை மசூதி முழுவதையும் இடிப்பது பற்றியது அல்ல; சாலை விரிவாக்கத்திற்காக அதன் ஒரு பகுதியை இடிப்பது பற்றியதே ஆகும்.

By admin