• Wed. Sep 9th, 2026

24×7 Live News

Apdin News

’90 ஆண்டுகள் பழமையான கணிதச் சிக்கலை 88 மணி நேரத்தில் தீர்த்தோம்’ – ஓபன்ஏஐ

Byadmin

Sep 9, 2026


90 ஆண்டுகள் பழமையான கணிதப் புதிரை 88 மணி நேரத்தில் தீர்த்த ஓபன்ஏஐ

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், கெலி ஹேய்ஸ்
    • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பல தசாப்தங்களாக தீர்வு காணப்படாமல் இருந்த மேம்பட்ட கணித சிக்கலை புதிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மாதிரி மற்றும் ஆயிரக்கணக்கான ஏ.ஐ பாட்களைப் பயன்படுத்தி சில மணி நேரங்களிலேயே தீர்வு கண்டுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

சாட்ஜிபிடி- ஐ உருவாக்கிய ஓபன் ஏஐ, சுமார் 10,000 ஏஐ ஏஜென்ட்கள் கொண்ட குழுவை ஒருங்கிணைத்து, கடினமானதாகக் கருதப்படும் ஒரு கணித சிக்கலுக்கு வெறும் 88 மணி நேரத்தில் தீர்வு கண்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. ஏஐ ஏஜென்ட்கள் என்பது ஓரளவுக்குத் தன்னிச்சையாகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய ஏஐபாட்கள் ஆகும்.

இந்த சிக்கல் திரவங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது தொடர்பான நேவியர்-ஸ்டோக்ஸ் சமன்பாடுகளுடன் தொடர்புடையது. இந்த சிக்கலின் முக்கியமான சில அம்சங்களுக்கு 90 ஆண்டுகளாகவும் கணிதரீதியான நிரூபணம் கிடைக்கவில்லை. அதாவது, ஒரு கணிதச் சமன்பாடு சரியானது என்பதை நிரூபிக்கும் ஆதாரம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தாங்கள் கண்டறிந்த தீர்வை ஒரு “மைல்கல்” என்று ஓபன் ஏஐ குறிப்பிட்டுள்ளது. ஏ.ஐ கருவிகள் மிக வேகமாக முன்னேறி வருகின்றன என்பதற்கு இது ஓர் ஆதாரம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஓபன் ஏஐ கண்டறிந்ததாகக் கூறும் தீர்வு இன்னும் சுயாதீனமாகச் சரிபார்க்கப்படவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கணித அமைப்பான க்ளே கணித நிறுவனம் இதை பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளவுமில்லை. குறிப்பிட்ட சில சிக்கலான கணிதப் பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காண்பவர்களுக்கு பெரும் பரிசுத்தொகை வழங்கும் மில்லினியம் பரிசுத் திட்டத்தை இந்த நிறுவனம் நடத்துகிறது.

By admin