• Tue. Jul 8th, 2025

24×7 Live News

Apdin News

Akash Deep: இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் கூறியது என்ன?

Byadmin

Jul 8, 2025


ஆகாஷ் தீப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகாஷ் தீப்பின் மூத்த சகோதரி புற்றுநோயுடன் போராடி வருகிறார்

“நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்.”

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த பிறகு, ஆகாஷ் தீப் இதைச் சொல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் வீழ்த்தி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்ய உதவினார்.

இரண்டாவது டெஸ்டில் பந்து வீசும்போது, ​​தனக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார். அது அவரது மூத்த சகோதரியின் முகத்தில் புன்னகையை வரவழைப்பது.

By admin