• Thu. Apr 23rd, 2026

24×7 Live News

Apdin News

CSK vs MI: சம பலம் வாய்ந்த இரு அணிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? இன்று மோதல்

Byadmin

Apr 23, 2026


CSK vs MI, ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை தலா 2 வெற்றிகளும், 4 தோல்விகளும் சந்தித்திருக்கின்றன (கோப்புப் படம்)

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் அதன் ‘எல் கிளாசிகோ’ போட்டிக்காகத் தயாராகிவிட்டது. இந்தத் தொடரின் வெற்றிகரமான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இரண்டும் வான்கடேவில் இன்று (ஏப்ரல் 23) இரவு மோதுகின்றன.

புள்ளிப் பட்டியலில் இரண்டாம் பாதியில் இருக்கும் இந்த இரு அணிகளுக்குமே இந்தப் போட்டி மிகவும் முக்கியம். இந்த மிகப் பெரிய போட்டியில் வெற்றி பெறுவது 2 புள்ளிகளை மட்டும் தரப்போவதில்லை. தொடர்ந்து முன்னேறுவதற்கான பெரும் நம்பிக்கையைக் கொடுக்கும். அதேசமயம், இந்தப் போட்டியில் தோற்றால் அது பின்னடைவை ஏற்படுத்தும். பிளே ஆஃப் வாய்ப்பையே கூட கேள்விக்குறியாக்கும். இந்த இரண்டு பெரிய அணிகளும் அப்படியொரு முக்கியமான, இக்கட்டான தருணத்தில் தான் நேருக்கு நேர் சந்திக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஓரளவு நல்ல முன்னேற்றம் கண்டு வந்தது. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக கையில் இருந்த ஆட்டத்தை நழுவவிட்டது. பந்துவீச்சுதான் பிரச்னை என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், தற்போது பந்துவீச்சில் முன்னேற்றம் தெரிகிறது; அதேசமயம் பேட்டிங் சொதப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆயுஷ் மாத்ரே வேறு இப்போது காயமடைந்திருக்கிறார்.

மாத்ரே இந்த சீசளில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். மிகவும் சீராக ஆடினார். சுமார் 140 கிமீ வேகத்தில் வரும் பந்தை ஃப்ரன்ட் ஃபூட் வைத்து புல் ஆடுவதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை.

அதேசமயம் மாத்ரேவின் இடத்தைக் கூட உர்வில் பட்டேல் வைத்து நிரப்பிட முடியும் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு மாற்று வீரராக வந்து அவர் சிறப்பாக செயல்பட்டார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்திருக்கிறார். பலவிதமான ஷாட்கள் ஆடக்கூடியவர். மாத்ரே கொண்டுவந்த அந்த ‘இன்டென்ட்’டை இவரிடம் பார்க்க முடியும். என்ன, மிடில் ஓவர் பேட்டிங்கில் மட்டும் சிஎஸ்கே சற்று கவனம் செலுத்த வேண்டும். சிறிய தருணங்களை எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்று பார்க்க வேண்டும்.

By admin