• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

FIFA WC 2026: ஆஃப்சைட் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? கடினமான விதி பற்றிய எளிய விளக்கம்

Byadmin

Jul 5, 2026


கால்பந்து, உலக கோப்பை, ஃபிஃபா, ஆஃப் சைட் விதி

பட மூலாதாரம், Shaun Botterill/Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கால்பந்து உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. கோல் போஸ்ட்டுக்குள் விழுந்தால் கோல், அதிக கோல்கள் அடித்தால் வெற்றி. கோல் கிக், கார்னர் கிக், பாக்சுக்கு வெளியே ஃபவுல் ஆனால் ஃப்ரீ கிக், பாக்சுக்குள் ஃபவுல் ஆனால் பெனால்டி, கடுமையான ஃபவுல் செய்தால் மஞ்சள் அட்டை, அதைவிடக் கடுமையான ஃபவுல் என்றால் சிவப்பு அட்டை. அவ்வளவுதான்.

ஆனால், அந்த கோல் என்பதை கடினமானதாக மாற்றும் ஒரு விதி இருக்கிறது. கால்பந்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களைக் குழப்பும், அச்சுறுத்தும் ஒரு விதி – ஆஃப் சைட்.

புரிந்தவர்களையுமே கூட இந்த விதி நிறைய விவாதங்களுக்கு உட்படுத்தும். பல சர்ச்சைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். பல்வேறு உட்பிரிவுகள், நுணுக்கங்கள் என மேலும் மேலும் நுட்பமாக செல்ல வேண்டியிருக்கும்.

கால்பந்தில் இந்த ஆஃப் சைட் விதி என்பது எப்போதுமே சர்ச்சைகளைக் கிளப்புவதாகவும், விவாதங்களை ஏற்படுத்துவதாகவுமே இருந்திருக்கிறது. அது தற்போது நடந்துவரும் ஃபிஃபா உலகக் கோப்பை தொடரிலுமே கூட தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கோல்கீப்பர் நின்ற இடம், பந்து ஒரு வீரர் மீது பட்டதா என்ற கேள்வி, எதிரணி வீரர் மீது வேண்டுமென்றே பட்டதா என்ற கேள்வி, ஃபவுல் செய்யப்பட்டபோது ஒரு வீரர் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்தாரா… இவை இந்த உலகக் கோப்பையில் ஆஃப் சைட் முடிவுகள் பற்றி எழுந்த கேள்விகள். ஆம், இவை இந்தத் தொடரில் மட்டுமே எழுந்த கேள்விகள். இதுதான் ஆஃப் சைட் எழுப்பும் கேள்விகள்.

By admin