• Sun. Jun 21st, 2026

24×7 Live News

Apdin News

FIFA WC 2026: குட்டி நாடான குராசோவா முதல் புள்ளி, உலக சாதனை சமன் செய்த எலாய் ரூம் – என்ன நடந்தது?

Byadmin

Jun 21, 2026


குராசோவா - ஈக்வெடார், உலகக்கோப்பை கால்பந்து 2026, கோல் கீப்பர் எலாய் ரூம்

பட மூலாதாரம், JUAN MABROMATA AFP via Getty Images

படக்குறிப்பு, குராசோவா கோல் கீப்பர் எலாய் ரூம் எதிரணியின் கோல் முயற்சியை முறியடிக்கிறார்.

    • எழுதியவர், கிறிஸ் மெக்கெனா
    • பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதன் முறையாக விளையாடும் குட்டி நாடான குராசோவா தனது முதல் புள்ளியை பெற்றுள்ளது. தனது இரண்டாவது ஆட்டத்தில் ஈக்வெடார் அணியை எதிர்த்து ஆடிய குராசோவா டிரா செய்தது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் ஏதும் அடிக்கவில்லை.

குராசோவா அணியின் கோல் கீப்பர் எலாய் ரூம் மிகச்சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் 15 கோல் வாய்ப்புகளை தடுத்து நிறுத்தினார்.

37 வயதான எலாய் ரூம், ஓர் உலகக் கோப்பை ஆட்டத்தில் அதிக முறை பந்தை தடுத்ததற்கான அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹோவர்டின் முந்தைய சாதனையை சமன் செய்துள்ளார்.

2014 உலகக்கோப்பை தொடரில் பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஹோவர்ட் எதிரணியின் 15 கோல் வாய்ப்புகளை முறியடித்திருந்தார். 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா தோல்வி கண்ட அந்த ஆட்டத்தில் அவர் இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் எலாய் ரூம் ஒரு கோல் கூட விடாமல் எதிரணியைத் தடுத்து நிறுத்தியது குராசோவா அணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க டிராவை பெற்றுத் தந்தது.

ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களிலேயே அவர் செய்த முதல் தடுப்பு, நேற்றைய இரவின் சிறந்த தடுப்பாகக் கருதப்படுகிறது; மிக நெருக்கத்தில் இருந்து வலென்சியா அடித்த பந்தை அவர் தடுத்தார்.

By admin