• Fri. May 1st, 2026

24×7 Live News

Apdin News

GT Vs RCB: ஆல் அவுட் ஆன பெங்களூரு – எளிய இலக்கை எட்ட திணறிய குஜராத் இறுதியில் வென்றது எப்படி?

Byadmin

May 1, 2026


'ஆல் அவுட் ஆன பெங்களூரு' - எளிய இலக்கை எட்ட திணறிய குஜராத் இறுதியில் வென்றது எப்படி?

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குஜராத் – பெங்களூரு இடையிலான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக தீர்மானிக்கப்பட்டது.

குஜராத் – பெங்களூரு அணிகளுக்கான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக்கப் பெத்தெலும் விராட் கோலியும் களமிறங்கினர். ஜேக்கப் பெத்தெல் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 5 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இதனால் இந்த அணி 3.2 ஓவரில் 35 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

தொடர்ந்து, தேவ்தத் படிக்கல் 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும்.

By admin