• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

IND vs BAN: இந்திய அணிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 5 வங்கதேச வீரர்கள் யார்?

Byadmin

Sep 19, 2024


இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் தொடர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு சக வீரர்களைக் கட்டிப்பிடித்த வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் நஸ்முல் ஹூசைன் ஷாண்டோ (வலமிருந்து இரண்டாவது)

நஸ்முல் ஹுசைன் ஷாண்டோ தலைமையிலான வங்கதேச அணி ஒரு கனவோடு இந்தியா வந்துள்ளது.

இதுவரை இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோல்விகளைச் சந்தித்து ஒரு வெற்றியைக்கூட பெறாத வங்கதேச அணி முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்ய முயற்சி செய்யும்.

பாகிஸ்தான் மண்ணில் நடந்த இரண்டு டெஸ்ட் தொடரில் அந்த அணியை தோற்கடித்ததன் மூலம் வங்கதேச அணியின் மனோபலம் உயர்ந்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பரில் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே முதல் டெஸ்ட் நடைபெற்றது. செளரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

By admin