• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

IND vs BAN சென்னை டெஸ்ட்: அஸ்வின் பேட்டிங், பவுலிங்கில் அசத்தல் – முதல் டெஸ்டில் இந்தியா வென்றது எப்படி?

Byadmin

Sep 22, 2024


இந்தியா - வங்கதேசம், சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் இந்தியா – வங்கதேசம் மோதிய முதல் டெஸ்டில் கோலியும் அஸ்வினும்

அஸ்வினின் மாயாஜாலம் மற்றும் ஜடேஜாவின் துல்லியமான சுழற்பந்துவீச்சால் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு வெற்றி கிட்டியது.

4வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 515 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 62.1 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - வங்கதேசம், சென்னை டெஸ்ட்

வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களும், வங்கதேசம் 149 ரன்களும் சேர்த்தன. 227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ரிஷப் பந்த்(109), கில்(119) இருவரும் சதம் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி நேற்று பிற்பகல் தேநீர் இடைவேளைக்கு முன்பாக ஆட்டத்தைத் தொடங்கியது.

By admin