• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

IND vs ENG நான்காவது டெஸ்ட்: ரிஷப் பந்த் காயத்தால் இந்தியாவுக்கு என்ன நெருக்கடி?

Byadmin

Jul 25, 2025


இந்தியா - இங்கிலாந்து, ரிஷப் பந்த்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எஸ். தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில், இரண்டாம் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் விளையாடி, மீண்டு வந்துள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்தின் மிகச் சிறந்த நாள் என்று நேற்றைய நாளை சொல்லலாம்.

இந்தியாவின் திட்டங்கள் எல்லாம் பலனளிக்காமல் போக, இங்கிலாந்து அணி தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சீதோஷனை நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு நாளின் இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த டெஸ்டின் நாயகனான ஜடேஜா, ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை, தவிர்க்க முடியாமல் தொட்டு, ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷார்துல் – வாஷிங்டன் சுந்தர் இணை, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளித்து விளையாடியது. இதே இணைதான், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப் அமைத்தது, இந்தியாவின் வெற்றி கைகொடுத்தது.

By admin