• Tue. Jul 29th, 2025

24×7 Live News

Apdin News

IND vs ENG: வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சதத்தை நெருங்கிய போது ஸ்டோக்ஸ் கூறியது என்ன?

Byadmin

Jul 29, 2025


டிராவுக்கு கைநீட்டிய பென் ஸ்டோகஸ் - நிராகரித்த சுந்தர், ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பென் ஸ்டோக்ஸ், மைதானத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் கைகுலுக்கி, போட்டியை டிரா செய்ய முன்மொழிந்தார்.

மான்செஸ்டரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆனால் இந்த போட்டியின் முடிவை வெற்றிக்கு இணையாக இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 311 ரன்கள் பின்தங்கியிருந்தாலும், கேப்டன் சுப்மன் கில், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி டெஸ்டை டிராவில் முடிக்க முடிந்தது.

ரன்கள் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை, கேப்டன் சுப்மன் கில், சதத்தை நெருங்கிய கே.எல்.ராகுல் 4 வது நாளில் காப்பாற்றினார்கள் என்றால், 5 வது நாளில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணை போட்டு இங்கிலாந்தின் வெற்றியை தட்டிப் பறித்தனர்.

இந்திய வீரர்களின் இந்த போராட்டமான ஆட்டத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இதே நேரத்தில் கடைசி நாளின் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

By admin