• Fri. Oct 23rd, 2026

24×7 Live News

Apdin News

IND vs NZ: நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நமன்தீர் – 226 ரன்களை சேஸ் செய்து இந்தியா சாதனை வெற்றி

Byadmin

Oct 23, 2026


கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை நமன் திர் மற்றும் அணியினர் கொண்டாடினர்.

படக்குறிப்பு, கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை நமன் திர் மற்றும் அணியினர் கொண்டாடினர்.

    • எழுதியவர், தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐந்து டி20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து சுற்றுப் பயணத்தை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஓவர் திரில்லரில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று முன்தினம் நியூசிலாந்து சென்றடைந்த இந்திய அணி, போதிய தயாரிப்பு இல்லாமலும் பயணக் களைப்புடனும் இன்றைய போட்டியில் களமிறங்கியது.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்கு கணக்கு தீர்க்கும் ஒரு வாய்ப்பாக நியூசிலாந்து இந்தத் தொடரைக் கருதியது. அத்துடன் புவனேஷ்வர் குமாரின் கம்பேக் போட்டி என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஷிவம் துபே வெளியே, நிதிஷ்குமார் உள்ளே

உலகின் அழகிய மைதானங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச்சில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பயணக் களைப்பு, போதிய பயிற்சி இல்லாமை குறித்து எந்தப் புகாரும் இல்லை என்று டாஸ் நிகழ்வின்போது அவர் தெரிவித்தார்.

By admin