• Sat. Oct 10th, 2026

24×7 Live News

Apdin News

IND vs WI: 249 ரன்களை குவித்தும் இந்தியா தோற்றது ஏன்? ஹோப் சதம், சேஸ் பந்துவீச்சு செய்த மாற்றம்

Byadmin

Oct 10, 2026


கடைசி கட்டத்தில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா இருவரும் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்தார்கள். இருவரும் ஒரேபோல் தலா 18 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்தார்கள்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்து 249 என்ற மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்தும்கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

ராஞ்சியில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்தது. அந்த இலக்கைத் துரத்திய மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட்டுகளை இழந்து 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது பெரிய சேஸ் இதுதான். இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக 220+ ரன்கள் எடுத்தும் அதை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறது இந்திய அணி.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற உதவிய அவர்களின் கேப்டன் ஷாய் ஹோப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

By admin