• Thu. Oct 1st, 2026

24×7 Live News

Apdin News

IND vs WI: 406 ரன் இலக்கை வெறும் 2 விக்கெட் இழந்து இந்தியா அபாரமாக சேஸ் செய்தது எப்படி?

Byadmin

Oct 1, 2026


223 ரன்கள் விளாசிய கில்: 406 ரன் இலக்கை வெறும் 2 விக்கெட்  இழந்து இந்தியா அபாரமாக சேஸ் செய்தது எப்படி?

கவுஹாத்தியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் அரங்கேறியது. 406 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்து சாதனை வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்திய அணி.

மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. ஜான் கேம்பெல், ஷாய் ஹோப், அமிர் ஜாங்கோ மூவரும் சதமடித்து அசத்தினார்கள்.

மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 43.3 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டியது. கேப்டன் சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்து ஆட்ட நாயகனாக ஜொலித்தார். முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதனால் ஒருநாள் போட்டி வரலாற்றில் இரண்டாவது பெரிய சேஸை அரங்கேற்றியது இந்திய அணி. இந்தப் பெரும் சேஸ் எப்படி நடந்தது?

விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடும் இந்திய அணி

இந்தப் போட்டி தொடங்கும்போதே இது பெரிய ஸ்கோர் அடிக்கக்கூடிய ஆட்டமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

By admin