• Tue. May 5th, 2026

24×7 Live News

Apdin News

LSG vs MI: 228 ரன்கள் எடுத்த லக்னௌவை மும்பை வீழ்த்தியது எப்படி?

Byadmin

May 5, 2026


இந்த ஐபிஎல் சீசனில் தன்னுடைய 2வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த ஐபிஎல் சீசனில் தன்னுடைய 2வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் ரோஹித் ஷர்மா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 47வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாகப் பொறுப்பேற்றார். காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக விளையாடாத ரோஹித் ஷர்மா இந்தப் போட்டிக்குத் திரும்பியிருக்கிறார். லக்னௌ அணிக்கு ஜாஷ் இங்லிஸ் அறிமுகம் ஆகிறார்.

முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார்.

இந்த இலக்கை 18.4 ஓவர்களில் சேஸ் செய்து இந்த சீசனில் தங்களின் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ். அந்த அணியின் ஓப்பனர்கள் ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கில்டன் இருவரும் அரைசதம் அடித்தார்கள்.

பேட்டிங்கில் அசத்திய லக்னௌ

தொடர்ந்து தொடக்க ஜோடியை மாற்றிக்கொண்டே இருந்த லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் இந்தப் போட்டியிலும் அதை மாற்றியது. மிட்செல் மார்ஷ் உடன் இந்தப் போட்டியில் ஓப்பனராகக் களமிறங்கினார் ஜாஷ் இங்லிஸ். சற்று அதிரடியாகத் தொடங்கினாலும் 13 ரன்களில் அவுட் ஆனார் இங்லிஸ்.

By admin