0
Microsoft நிறுவனம் அதன் ஊழியர் அணியில் சுமார் 4 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முதலீட்டைப் பெருக்கி செலவைக் குறைக்க நிறுவனம் திட்டமிடுகிறது. நிர்வாகிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கட்டமைப்பில் மாற்றம் செய்யவிருப்பதாய் நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி, நிறுவனத்தில் சுமார் 228,000 பேர் வேலை செய்தனர். கடந்த மே மாதம் 6,000 பேரை வேலையிலிருந்து நீக்குவதாக Microsoft நிறுவனம் தெரிவித்தது.
Microsoft அதன் விற்பனைப் பிரிவில் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிடுவதாய் Bloomberg செய்தி நிறுவனம் கடந்த மாதம் கூறியிருந்தது.
அதேவேளை, Amazon மற்றும் Facebookஐ நிர்வகிக்கும் Meta ஆகிய நிறுவனங்களும் இவ்வாண்டு ஆட்குறைப்பு பற்றி அறிவித்தன.
நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன.