• Thu. Jul 31st, 2025

24×7 Live News

Apdin News

“STR49” படத்தின் ப்ரோமோ வீடியோ குறித்து அசத்தல் அப்டேட்

Byadmin

Jul 30, 2025


சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் ப்ரோமோ வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

இந்நிலையில், ப்ரோமோ வீடியோ வெளியாகும் தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, எஸ்டிஆர்49 படத்தின் ப்ரோமோ வீடியோவை யூடியூபில் வெளியிடுவதற்கு முன்பு, நேரடியாக தியேட்டர்களில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

அதுவும், ரஜினியின் கூலி திரைப்படத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

By admin