• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

‘TN 2026’ நாளை ஓடிடியில் வெளியீடு… எதில் பார்க்கலாம்?

Byadmin

Apr 29, 2026


2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை அடிப்படையாக கொண்டு உருவான நகைச்சுவைப் படம் ‘டிஎன் 2026’. இப்படம் கடந்த 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கினார் உமாபதி ராமையா.

இப்படத்தில் நடிகர் நட்டி நாயகனாக நடிக்க இவருடன் சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் இப்படத்தை தயாரித்தனர். படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘டிஎன் 2026’ நாளை முதல் பிரபல ஓ.டி.டி. தளமான பிரைம் வீடியோவில் வெளியாகிறது. மேலும் இப்படத்தை சிம்பிளி சௌத், ஷார்ட் ஃப்ளிக்ஸ், ஆஹா மற்றும் ஏபி இன்டர்நேஷனல் ஆகியவற்றிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது.

By admin