• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

ஃபாரஸ்ட் சிட்டி: மலேசியாவின் ‘கனவு நகரம்’ மோசடி கும்பல்களின் கூடாரமாக மாறியதா?

Byadmin

Aug 18, 2026


ஃபாரஸ்ட் சிட்டி

பட மூலாதாரம், BBC/Gavin Butler

தொலைவில் இருந்து பார்த்தால், மலேசியாவின் ஃபாரஸ்ட் சிட்டி 3டி பிரிண்டரில் உருவாக்கப்பட்டதைப் போலத் தெரிகிறது.

எந்த சிறப்பம்சமும் இல்லாத கடற்கரையோரத்தில், பெரிய அளவில் ஒரே மாதிரியான வெள்ளை நிறக் கட்டடங்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன.

சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் 2016-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, 100 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த மாபெரும் திட்டம், “ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கான கனவு உலகம்” என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

சுமார் 700,000 பேர் வசிக்கக்கூடிய சிறப்பு நிதி மண்டலமாக இது உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பத்தாண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூருக்கு அருகில் 14 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தத் தீவில், மதிப்பிடப்பட்ட மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வசிப்பதாகக் கூறப்படுகிறது.

By admin