• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து யாழில் “நீதியின் ஓலம்” பேரணி

Byadmin

Aug 18, 2026


சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (17) யாழ். பொது நூலக முன்றலில் ஆரம்பமாயின.

இதன்போது நடைபெற்ற பேரணி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை சென்றடைந்தது. அங்கிருந்து வைத்தியசாலை ஊடாக வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி பேரணி சென்றடைந்தது.

இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி மகஜர் கையளிக்கப்பட்டது.

பல நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டம், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை வலுப்படுத்தி பேரணி போராட்டம் நடத்தப்பட்டது.

By admin