• Fri. Oct 2nd, 2026

24×7 Live News

Apdin News

ஃப்ளைதுபை விமானத்தை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Oct 2, 2026


ஸ்மித் மச்சார்

படக்குறிப்பு, நான்கு ஆண்டுகளுக்கு முன் ஃப்ளைதுபை நிறுவனத்தில் இணைந்த ஸ்மித் மச்சார், சௌதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளார்; அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்திய விமானி ஸ்மித் மச்சார், இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை விமானம் விபத்துக்கு உள்ளாவதைத் தடுத்து காப்பாற்றியதற்காக நாயகனாகப் போற்றப்படுகிறார். உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் ஸ்மித் மச்சார் பாராட்டப்பட்டு வருவதுடன், அவரது வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் ஆராயப்பட்டு வருகிறது.

விமானப் போக்குவரத்து என்பது ஸ்மித்தின் சிறு வயது கனவுகளில் ஒன்றாக ஒருபோதும் இருந்ததில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

“மச்சார் தனது குடும்பத்தின் ஜவுளித் தொழிலை எடுத்து நடத்த வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால், 19 வயதில் அவருக்கு விமானப் போக்குவரத்து மீது ஆர்வம் ஏற்பட்டது. இது அவரது தாயாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மணிநேரம் விமானங்களை இயக்கிய பிறகும், விமானப் போக்குவரத்து மீதான மச்சாரின் காதல் காக்பிட்டுக்கு உள்ளேயே இருக்கிறது. தரையில் இருப்பவர்களிடம் அதைப் பற்றிப் பேசுவதை அவர் தவிர்க்கிறார்” என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

புதன் கிழமை, அந்த விமானம் தபூக் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. இஸ்ரேல் அதிகாரிகளின் கூற்றுப்படி, துணை விமானி நடுவானில் மச்சாரை தாக்க முயன்றதாகவும், 174 பேரை ஏற்றிச் சென்ற விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

“மும்பையைச் சேர்ந்த மச்சார், ரத்தம் சிந்த காக்பிட் தரையில் கிடந்தபோது, காக்பிட் கதவைத் திறப்பதற்கான வெளியீட்டு அமைப்பைச் செயல்படுத்த முடிந்தது. பின்னர் பயணிகளும் விமானப் பணியாளர்களும் துணை விமானியை கட்டுப்படுத்தினர். பயணிகளாக அந்த விமானத்தில் பயணித்த ஃப்ளைதுபையை சேர்ந்த இரு விமானிகள் விமானக் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்து அதை சௌதியில் தரையிறக்க உதவினர்” என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

By admin