பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மன உளைச்சல்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் விலக்கிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அந்தத் தேர்வை எழுதிய, பணியிலுள்ள ஆசிரியர்கள் 2 லட்சத்து 20,464 பேரின் மன உளைச்சல் முடிவுக்கு கொண்டு வரப்படும்.