• Fri. Oct 2nd, 2026

24×7 Live News

Apdin News

மகாத்மா காந்தி தமிழ் கற்க முயன்றது ஏன்? அவரது அரசியல் பாதையை தமிழர்கள் தீர்மானித்தது எப்படி?

Byadmin

Oct 2, 2026


காந்தி தமிழ்நாட்டை நேசித்தார், தமிழ்நாடும் காந்தியைத் தன் அரசியல் மற்றும் சமூக வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டது.

    • எழுதியவர், ஜா.ரோஸ்லின் அனிஷா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அது, 1914ஆம் ஆண்டு.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இறுதியாக இந்தியாவுக்கு புறப்படவிருந்த தருணம்.

தமிழ் மக்கள் அவருக்கு ஒரு பெரிய பிரிவு உபசார விழா நடத்தினார்கள். அப்போது அவர் தனது உள்ளத்தைத் திறந்து உணர்வுபூர்வமாக நிகழ்த்திய உரை தமிழர் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று.

“தமிழர்களை நான் சந்தித்தபோது என் உடன்பிறந்தோரைச் சந்திப்பது போலவே உணர்ந்தேன். எத்தனையோ ஆண்டுகளாக நான் போற்றி வளர்த்து வந்துள்ள உணர்ச்சி இது. அதற்கான காரணமும் மிக எளிது. இந்தியரிடையே உள்ள பல்வேறு பிரிவினரில் போராட்டத்தின் உக்கிரத்தைத் தாங்கியவர்கள் தமிழர்கள்தான் என்று கருதுகிறேன்.

“சத்தியாகிரகத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களில் மிக அதிகமானோர் தமிழினத்தைச் சேர்ந்தவர்களே. எந்தத் தரப்பை எடுத்துக் கொண்டாலும் இந்தியாவின் மிகச் சிறந்த பரம்பரைக்கு மிகச் சிறந்த சான்று தாங்கள்தான் என்பதை தமிழர்கள் மெய்ப்பித்து இருக்கிறார்கள். எள்ளளவும் இதை நான் மிகைப்படுத்திக் கூறவில்லை” என்று காந்தி அங்கு உரையாற்றியதாக ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin