• Tue. Nov 17th, 2026

24×7 Live News

Apdin News

அக்வான் புயல் அதிதீவிர புயலாக வாய்ப்பு – சென்னைக்கு 2 நாள் மிகக் கனமழை எச்சரிக்கை

Byadmin

Nov 17, 2026


அக்வான் புயல் அதிதீவிர புயலாக வாய்ப்பு - சென்னைக்கு 2 நாள் மிகக் கனமழை எச்சரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்வான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அதிதீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதன் அறிக்கைப்படி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ‘அக்வான்’ எனப் பெயரிடப்பட்ட புயலாக வலுப்பெற்றது.

இன்று (நவம்பர் 16) இந்திய நேரப்படி மாலை 5.30 மணியளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் மையம் கொண்டிருந்தது.

இது சென்னைக்குக் கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இந்தப் புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 17ஆம் தேதி மாலை வாக்கில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 19ஆம் தேதி காலை வாக்கில் அதி தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.

By admin