• Tue. Nov 17th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுடன் அமைதி பேச்சுவார்த்தை: அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

Byadmin

Nov 17, 2026


முயற்சிகள் வீணாகாது:

“தூதரக ரீதியிலான செயல்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; இந்த முயற்சிகள் வீணாகாது என்று நம்புகிறோம். எங்கள் குழு மிகவும் ஆக்கபூர்வமான முறையில் பணியாற்றி வருகிறது,” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி மற்றும் போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இதில் முழுமையாக பங்கேற்றனர் என்றும், ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுடனான எதிர்கால சந்திப்புகளிலும் அவர்கள் இதேபோல் பங்கேற்பார்கள் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

இந்த விவாதம் “எளிதானதாக இருக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார், ஆனால் கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் கூட்டணியுடன் பெர்லினில் மீண்டும் சந்திப்பதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

By admin