• Tue. Nov 17th, 2026

24×7 Live News

Apdin News

அடர்ந்த காட்டுக்குள் 2 மாத குழந்தையுடன் 15 வயது சிறுமி மீட்பு – 4 மாதத்திற்கு முன் காணாமல் போனவருக்கு என்ன நடந்தது?

Byadmin

Nov 17, 2026


அடர்ந்த காட்டுக்குள் 2 மாத குழந்தையுடன் 15 வயது சிறுமி  மீட்பு - 4 மாதத்திற்கு முன் காணாமல் போனவருக்கு என்ன நடந்தது?

இலங்கையில் நான்கு மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயது சிறுமி அடர்ந்த காட்டுக்குள் 2 மாத கைக்குழந்தையுடன் மீட்கப்பட்டுள்ளார்.

நக்கிள்ஸ் மலைத்தொடரின் அடர்ந்த வனப்பகுதியில், பாறைகளுக்கு இடையே பிளாஸ்டிக் தார்ப்பாய்களால் மூடப்பட்ட இடத்தில் இருந்த அவரை இலங்கை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 23 வயது இளைஞரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் 36 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ன நடந்தது?

நான்கு மாதங்களாக தொடர்ந்த தேடுதல்

இலங்கையின் நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகிலுள்ள மீமுரே, கந்தகெட்டிய பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். அதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் ஜூலை 13ஆம் தேதி உடுதும்புர காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதையடுத்து காவல்துறையினர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து சிறுமியைத் தேடியபோதிலும் அவரைக் கண்டறிய முடியவில்லை.

By admin