15
தமிழ் நாட்டு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்து பிரிவதாக அவரது மனைவியும், பிரபல அதிர்ஷ்ட இலாபச் சீட்டு வர்த்தகர் சாண்டியாகோ மார்டினின் மகளுமான டெய்சி உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 14 ஆண்டுகாலப் பயணத்தில் அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த தருணங்களைக் கடந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு தங்களுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும், தங்களது பிள்ளைகளின் நலனையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வதில் இருவரும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும், அதுவே தங்களது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுன் மீது தனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு என்றும், அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும் அமைதியும் வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துவதாகவும் டெய்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாறுபட்ட மற்றும் கடினமான காலகட்டத்தில் பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
