• Mon. Nov 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றாலும் கம்பீர் கவலை ஏன்? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Nov 16, 2026


இந்திய அணி, பேட்ஸ்மேன்கள், ஒருநாள் உலகக் கோப்பை, கௌதம் கம்பீர்

படக்குறிப்பு, நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், பேட்ஸ்மேன்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்திருந்தார்

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய அணி தொடரை வென்றிருந்தாலும் கூட அணியின் பேட்டிங் செயல்பாடு பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்தார். தற்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியும் இதே கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

நவம்பர் 13-ஆம் தேதி மெளண்ட் மெளங்கானுயில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெறும் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இருப்பினும், அந்தப் போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்களால் 209 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

2027-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை நெருங்கும் நிலையில், இந்திய அணியின் இந்த பேட்டிங் செயல்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. நியூசிலாந்தில் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்ட ஆடுகளச் சூழலும், உலகக் கோப்பையின் போது அவர்கள் சந்திக்கக் கூடிய சவால்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கலாம் என்று கம்பீர் கருதுகிறார்.

By admin