• Mon. Nov 16th, 2026

24×7 Live News

Apdin News

கருப்பையில் இருக்கும் போதே குழந்தைக்கு செய்யக்கூடிய 6 முக்கிய சிகிச்சைகள் எவை?

Byadmin

Nov 16, 2026


கருப்பையில் இருக்கும் போதே குழந்தைக்கு செய்யக்கூடிய 6 முக்கிய சிகிச்சைகள்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

குழந்தை பிறப்பதற்கு முன்பே இதயம், நுரையீரல், சிறுநீரகம், முதுகுத்தண்டு எனப் பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு கருப்பைக்குள்ளேயே அறுவை சிகிச்சை செய்ய முடியும். சில சிகிச்சைகளில் லேசர் பயன்படுத்தப்படுகிறது. அரிதான பாதிப்புகளுக்கு தாயின் கருப்பையைத் திறந்து குழந்தையின் உறுப்பையே மருத்துவர்கள் சரிசெய்கிறார்கள்.

கருவிலேயே செய்யக்கூடிய இத்தகைய அறுவை சிகிச்சைகள் என்னென்ன? அவை எப்படிச் செய்யப்படுகின்றன?

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் எல்லாப் பாதிப்புகளுக்கும் இத்தகைய சிகிச்சைகள் சாத்தியமில்லை. குறிப்பிட்ட பாதிப்புகள், கர்ப்பத்தின் காலம், குழந்தையின் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து மருத்துவர்கள் முடிவெடுக்கிறார்கள். இந்தியாவிலும் இதுபோன்ற பல வகையான கருவுக்குள் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

கர்ப்ப காலத்தில் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் சில பாதிப்புகளை, குழந்தை பிறக்கும் வரை காத்திருக்காமல் கருப்பைக்குள்ளேயே சரிசெய்ய முடியும். இதற்கு ‘ஃபீட்டல் சர்ஜரி’ (Fetal Surgery) என்று பெயர்.

“சில சிகிச்சைகளில் தாயின் வயிற்றில் சிறிய துளையிட்டு, அதன் வழியாக நுண்ணிய கருவிகளைச் செலுத்துவார்கள். சிலவற்றில் லேசர் பயன்படுத்தப்படும். சில அரிதான பாதிப்புகளுக்கு தாயின் கருப்பையைத் திறந்து நேரடியாகவே குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது” என்கிறார் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் இந்திரா நெடுமாறன்.

By admin