5
‘மொத ராத்திரி’ படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் .டி கே. கார்த்திகேயன் முதன் முதலாக கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லவ் லாக்- Love Lock” படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் எட்வின் ஜி ஜெ இயக்கத்தில் தயாராகும் ‘லவ் லாக்’ படத்தில் டி. கே கார்த்திகேயன், கௌசல்யா, நடிகை லாவண்யா அன்பழகன், ராஜ் எம் ஆர் கே, ரமா, உதய் மகேஷ், அஜித் கோஷி, தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரசோமிகின் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மூன்ராக்ஸ் இசைக்குழுவினர் இசையமைக்கிறார்கள்.
ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடாஜலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிக்கிறார். படத்தின் தொடக்க விழா சென்னையில் பாரம்பரிய பூஜையுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”பெற்றோர்களின் பேரன்பு சார்ந்த லவ் லாக்…? காதலர்களின் அன்பான லவ் லாக் …? இதில் எந்த லவ்லாக் உடையும்..? லவ் லாக் எனும் அன்புச் சங்கிலி உடையுமா? உடையாதா? என்பதை மையப்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இந்த படம் உருவாகிறது.
இந்தப் படத்தின் மூலம் கதையின் நாயகனாக நடிக்கும் கார்த்திகேயன் கவிதை எழுதும் கவிஞராகவும், நடிகர் எம் ஆர் கே ராஜ் ரஜினி ரசிகராகவும், இந்த இரண்டு நாயகர்களும் காதலிக்கும் பெண்ணாக புதிரான கதாபாத்திரத்தில் லாவண்யா அன்பழகனும், அவரின் அம்மாவாக கௌசல்யாவும் நடிக்கிறார்கள்” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது எனறும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.