• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

அடேங்கப்பா!… இவ்வளவு கோடிக்கு ஒப்பந்தமா? ‘ஜெயிலர் 2’ படைத்த சாதனை

Byadmin

Apr 18, 2026


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ ஜெயிலர் 2’. நெல்சன் இயக்கும் இப்படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் ஓ.டி.டி. ஒப்பந்தத்தில் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் பாகமான ‘ஜெயிலர்’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்ற பிரைம் வீடியோ, அதன் இரண்டாம் பாகத்தின் உரிமத்தையும் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘ஜெயிலர்’ படம் ரூ.100 கோடிக்கு முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்திற்கான ஒப்பந்தம் ரூ.160 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு புதிய சாதனையை படைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இத்தகவல்கள் குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

By admin