• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

அணுசக்தித் திட்ட விவகாரத்தில் ஈரான் எந்தவித நெகிழ்வுத்தன்மையையும் காட்டாது என்று தெரிவிப்பு!

Byadmin

Sep 27, 2026


ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டாலும், தனது அணுசக்தித் திட்ட விவகாரத்தில் ஈரான் எந்தவித நெகிழ்வுத்தன்மையையும் காட்டாது என்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, அமெரிக்காவால் “ஈரானின் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்படும்” வரை அந்த நீர்வழிப்பாதை மூடப்பட்டே இருக்கும் என்றும் கூறினார்.

ஈரானின் முன்மொழிவின்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க தெஹ்ரான் முன்வந்துள்ளது.

ஏழு நாட்களுக்குள் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் மோதல்கள் முடிவுக்கு வரும்; அதேவேளையில் அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குவதுடன், முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவிக்கவும், எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஷ

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான ஏழு மாத கால மோதலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த முன்மொழிவு வந்துள்ளது.

இருப்பினும், அமெரிக்கா இந்த முன்மொழிவுகளை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin