• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

நரி இறைச்சி, தக்ஷக் பல்லி, அட்டைப் பூச்சி எண்ணெய் நோயைக் குணப்படுத்துமா? நம்பிக்கையும் அறிவியல் உண்மையும்

Byadmin

Sep 27, 2026


நரி இறைச்சியில் மருத்துவ பலன்கள் உள்ளதா? வங்கதேசத்தில் நிலவும் நம்பிக்கைகளும் அறிவியல் உண்மைகளும்

படக்குறிப்பு, கோப்புப் படம்

    • எழுதியவர், மரியம் சுல்தானா
    • பதவி, பிபிசி வங்க சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நரி இறைச்சியைச் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும், தக்ஷக் (ஒரு வகை மரப்பல்லி) ஆஸ்துமா முதல் பாலியல் கோளாறுகள் வரையிலான பல்வேறு பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, மற்றும் அட்டை எண்ணெய் வலிகளையும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது என்பன போன்ற நாட்டுப்புற நம்பிக்கைகள் வங்கதேசத்தின் பல பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வருகின்றன.

ஒரு காலத்தில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இவை பெருமளவில் காணப்பட்டன. பாரம்பரிய மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாக இவற்றின் தேவை மற்றும் பயன்பாடு பற்றி பல நம்பிக்கைகள் நிலவி வந்தன. அதன் காரணமாக, சீனா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இவை கடத்தப்பட்டன.

இதனால் இந்த விலங்கினங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக காட்டுயிர் நிபுணர்களின் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம், அட்டை எண்ணெய் போன்ற பொருட்கள் இன்னமும் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த எண்ணெய்கள் மூட்டு வீக்கம், மூட்டு வலி மற்றும் முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்த வல்லவை என்று வியாபாரிகள் கோருகின்றனர்.

இதேபோல், பல்வேறு பகுதிகளில் நரி இறைச்சி பற்றிய நாட்டுப்புற நம்பிக்கைகளும் நிலவுகின்றன.

By admin