• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கனடா வீராங்கனை

Byadmin

Sep 27, 2026


சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன.

இதில் ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன், ரஷியாவின் புரோஜோரோவா உடன் மோத இருந்தார். காயம் காரணமாக ரஷிய வீராங்கனை வெளியேறியதால் டாலியா கிப்சன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போலந்தின் சாவ்லின்ஸ்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

By admin