ஜிஜி தாம்சன்
இந்நிலையில் கேரளாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன், ஞானேஷ் குமார் குறித்து ஒரு முக்கியக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தாம்சனின் கூற்றுப்படி, 2016ஆம் ஆண்டு டெல்லிக்குச் சென்ற விமானப் பயணத்தின்போது, 2019 மக்களவை தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராகலாம் என அப்போது டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் கேரள அரசின் குடியிருப்பு ஆணையராக இருந்த ஞானேஷ் குமார் வற்புறுத்தி கூறியுள்ளார்.
ஆனால், தாம்சன் அரசியலில் நுழையத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.