• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

‘ஏவுகணைகள் சரியான நேரத்தில் வருகின்றன’ – நேபாள பிரதமர் பாலேன் ஷாவின் ஐ.நா. உரைக்கு பாராட்டுகள் ஏன்?

Byadmin

Sep 27, 2026


பாலேன் ஷா

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வல்லரசு நாடுகளின் மீதுதான் பொதுவாக அனைவரது கவனமும் இருக்கும்.

ஆனால், இந்த முறை நேபாள பிரதமர் பாலேந்திர ஷா (பாலேன் ஷா) கவனம் பெற்றுள்ளார்.

செப்டம்பர் 24 அன்று, ஐ.நா. பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் 36 வயதான நேபாள பிரதமர் தனது உரையில் பேசிய கருத்துகள் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றன.

அவர் பேசிய இந்த இரண்டு வரிகள்தான் அதிகம் கவனம் பெற்றுள்ளன. “நாம் வெப்பமாக்காத காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும், நாம் தொடங்காத போர்களின் விளைவுகளையும் நாம் அனுபவித்து வருகிறோம்.”

“போருக்கான சிறப்பான கட்டமைப்பைக் கொண்ட உலகை நாம் உருவாக்கியுள்ளோம்; ஆனால் உணவுக்கான கட்டமைப்பு மோசமாக உள்ளது.”

By admin