• Mon. Aug 3rd, 2026

24×7 Live News

Apdin News

அதிக ஆண்கள் 30 வயதுக்குள்ளேயே கருத்தடை செய்துகொள்வது ஏன்?

Byadmin

Aug 3, 2026


அலெக்ஸ்

பட மூலாதாரம், Alex West

படக்குறிப்பு, அலெக்ஸ்

    • எழுதியவர், ஜார்ஜ் சாண்டமன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முதல் குழந்தை பிறந்தபோது தனது மனைவி எதிர்கொண்ட கடினமான பிரசவ அனுபவம் அலெக்ஸ் வெஸ்டை ஆழமாக பாதித்தது. இரண்டாவது குழந்தையின் பிறப்பின்போது எல்லாம் மிகவும் சுமுகமாக அமையும் என்று அவர் நம்பினார்.

அவரது மனைவிக்கு அந்தப் பிரசவம் நன்றாகவே அமைந்தது. ஆனால் அலெக்ஸுக்கு அப்படியில்லை.

“எனக்கு பீதியால் அதிர்ச்சி ஏற்பட்டது. மனரீதியாக முற்றிலும் உடைந்துபோனேன். முதல் பிரசவ அனுபவத்தால் ஏற்பட்ட பாதிப்பை என்னால் முழுமையாக சமாளிக்க முடியவில்லை,” என்று அலெக்ஸ் கூறுகிறார்.

முதல் குழந்தையின் பிறப்பின்போது ஏற்பட்ட மன உளைச்சலும், அதன்பிறகு அவரை பாதித்த பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வும் காரணமாக, நான்கு குழந்தைகள் வேண்டும் என்ற திட்டத்தைத் தொடர அலெக்ஸ் விரும்பவில்லை.

தனது இரு மகன்களும் பிறந்த பிறகான மாதங்களை மகிழ்ச்சியோ உற்சாகமோ இல்லாத, ஒரு காலகட்டமாகவே அவர் நினைவுகூர்கிறார். அவரது வாழ்க்கை வண்ணமற்றதாக மாறியிருந்தது. அதே நேரத்தில், “தந்தையாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம்” என்று பலரும் அவரிடம் கூறிக்கொண்டே இருந்தனர்.

By admin