• Mon. Aug 3rd, 2026

24×7 Live News

Apdin News

FSSAI மதுபான நிறுவனங்களுக்கு கடும் தடை: அனுமதியற்ற சுவையூட்டல், தவறான வயது தகவல் வெளிச்சம்

Byadmin

Aug 3, 2026


மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அனுமதிக்கப்படாத சுவையூட்டும் முறைகளைப் பயன்படுத்தியதாகவும், வயது தொடர்பான தவறான தகவல்களைக் கூறியதாகவும் குற்றம் சாட்டி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

ஓல்ட் மங்க், மெக்டொவல்ஸ், பேக்பைப்பர், ஆன்டிகுவிட்டி ப்ளூ, ராயல் சேலஞ்ச் உள்ளிட்ட பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள், தற்போதுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிளிங் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மூலப்பொருட்கள், நொதித்தல், காய்ச்சி வடிகட்டுதல் மற்றும் முதிர்ச்சியடைதல் ஆகியவற்றின் மூலம் அதன் தனித்துவமான சுவையும் நறுமணமும் இயற்கையாக உருவாக அனுமதிப்பதற்குப் பதிலாக,

சில உற்பத்தியாளர்கள் ரம்மில் வெளிப்புறமாக “ரம் சுவையையும்” விஸ்கியில் “விஸ்கி சுவையையும்” சேர்ப்பது ஆய்வுகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதாக உணவு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுபான நிறுவனங்கள் மீது FSSAI குற்றச்சாட்டு

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய தயாரிப்புகள் பிரதானமாக நடுநிலை ஆல்கஹால் அல்லது கூடுதல் நடுநிலை ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கப்பட்டிருந்தாலும், அவை சாதாரண ரம் அல்லது விஸ்கி என்று சந்தைப்படுத்தப்படுகின்றன.

By admin